300 கோடியிலயே தத்தளிக்கும் பொன்னியின் செல்வன் 2 வசூல் – PS 1 சாதனையை முறியடிப்பது சந்தேகம் தான்?

0
300 கோடியிலயே தத்தளிக்கும் பொன்னியின் செல்வன் 2 வசூல் - PS 1 சாதனையை முறியடிப்பது சந்தேகம் தான்?
300 கோடியிலயே தத்தளிக்கும் பொன்னியின் செல்வன் 2 வசூல் - PS 1 சாதனையை முறியடிப்பது சந்தேகம் தான்?

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இதுவரை வசூலித்த மொத்த வசூல் விவரம் குறித்து இணையத்தில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் 2:

தமிழ் சினிமாவில் பெரிய வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் நாவலை பல இயக்குனர்கள் படமாக எடுக்க முயற்சித்து தோல்வியுற்ற போதிலும், தனியாளாக நின்று செய்து காட்டியவர் தான் இயக்குனர் மணிரத்னம். பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக எடுத்து சாதனை படைத்துள்ளார். இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மாதம் 29ம் தேதி வெளியான நிலையில் இதுவரை கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் வசூலில் சக்க போடு போட்டு கொண்டு தான் இருக்கிறது. இப்பொழுது வரை இந்த திரைப்படம் 300 கோடியை கடந்துள்ளதாக அண்மையில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். ஆனால் இந்த திரைப்படம் 1000 கோடிக்கு மேல் வசூலிக்கும் என படக்குழுவினர்கள் கூறி வந்த நிலையில், தற்போது 400 கோடியை தொடுமா என்பதே சந்தேகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

என்ன அட்லீ இதெல்லாம்.., படத்தை தான் காப்பி அடிப்பீங்கனு பார்த்த., இதையும் விட்டுவைக்கலயா – மீம்ஸ் வைரல்!!

ஏனென்றால் இந்த வாரம் புது புது படங்கள் வெளியாக இருக்கிறது. இதனால் பொன்னியின் செல்வன் படத்திற்கு திரையரங்குகள் குறையலாம். இதனால் அப்படத்தின் வசூலில் சிக்கல் ஏற்படலாம். என்னதான் வெறும் 250 கோடி பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் எடுத்து வெற்றி வாகை சூடி இருந்தாலும், 2ம் பாகம் முதல் பாகத்தை விட பெரிதாக வசூல் ஈட்டாதது கோலிவுட்டில் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here