குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக வரும் ‘பொங்குறோம் திங்கிறோம்’ – அப்போ இனி வேற லெவல் தான்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளியை அடுத்து அதே பாணியில் முக்கிய சேனல் ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளது. இது பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சமையல் நிகழ்ச்சி

சமையல் நிகழ்ச்சி என்றாலே அதற்கு எப்பொழுதுமே தனி வரவேற்பு இருக்க தான் செய்யும். ஏனெனில் இந்த காலத்தில் உணவு சம்மந்தப்பட்ட சில நிகழ்ச்சி தான் பிரபலமாகி வருகிறது. விஜய் டிவியில் ஏற்கனவே ‘சமையல் சமையல்’ நிகழ்ச்சி அதிக பிரபலமடைந்தது.

மேலும் பல சீசன்களாக ஒளிபரப்பாகியது. இப்படி இருக்க 2019 இல் புதிய கான்செப்ட்டில் உருவாக்கப்பட்டது தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி. ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியலுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. காமெடி கலந்த ஒரு சமையல் நிகழ்ச்சி என்பதால் அவ்வளவு பிரபலமடைந்தது.

கோமாளிகளுக்கு சமையல் பற்றிய எந்த விஷயமும் தெரியாமல் எப்படி குக்குகளை கஷ்டப்படுத்துகிறார்கள் என்பதே கான்செப்ட். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை போலவே புதிய நிகழ்ச்சி ஒன்று உருவாக உள்ளது. அதாவது ‘பொங்குறோம் திங்கிறோம்’ என்ற பெயரில் தொடங்கவுள்ளனர்.

இது முக்கிய சேனல் ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளது. ஆனால் எந்த சேனல் என்ற தகவல் வெளியாகவில்லை. இதில் ரோபோ ஷங்கர், கிரேஸ் கருணாஸ் போன்ற முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அமுதவாணன், தங்கதுரை, நாஞ்சில் விஜயன், ஷர்மிளா, இந்திரஜா ரோபோசங்கர், சம்யுக்தா, சில்மிசம், ஆகாஷ், பிரியா, உதயா, சிவா, சாய், ரஞ்சித்,  சாய் கலந்துகொள்ளவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here