பொங்கல் சிறப்பு ரயில்கள் – இன்றே புக் பண்ணுங்க!!

0
Pongal Special Trains

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களின் வசதிக்காக ஏற்கனவே சிறப்பு பேருந்துகள், அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிறப்பு ரயில்கள் தொடர்பான அறிவிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

ரயில்கள் பயண விபரம்:

 1.  சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 10ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயில் (82601), மறுநாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலி சென்றடைய உள்ளது. 

 2.  திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 11ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயில் (06002) , மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.

 3.  தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82603), மறுநாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். அங்கிருந்து ஜனவரி 18ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82604) , மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரத்தை வந்து சேரும்.

 4.  நாகா்கோவிலிலிருந்து ஜனவரி 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில்(82606), மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரம் வந்துசேரும்.

 5.  திருச்சியில் இருந்து ஜனவரி 11ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயில்(06026), அதேநாள் இரவு 8.15 மணிக்கு சென்னை எழும்பூா் வந்து சேரவுள்ளது.

 6.  தாம்பரத்திலிருந்து ஜனவரி 20ஆம் தேதி முற்பகல் 11.20 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயில்(06075), மறுநாள் அதிகாலை 2 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும்.

 7.  சென்னை-திருநெல்வேலி, தாம்பரம்-நாகா்கோவில், நாகா்கோவில்-திருச்சிக்கு சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

முன்பதிவு தொடக்கம்

பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (ஜனவரி 8) காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.
இதனால் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் உற்சாகமாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here