தமிழகத்தில் பொங்கல் பரிசு குறித்து முதலமைச்சர் புதிய உத்தரவு – அதிகாரிகளுக்கு செக் வைத்து ஸ்டாலின் அதிரடி!!

0

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தரமான பொங்கல் தொகுப்பு பொருட்கள் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

 முதல்வர் உத்தரவு :

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பொருட்களோடு சேர்த்து, 21 சமையல் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை  இந்த பொருட்களோடு பணப் பரிசு வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு, இது குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

தற்போது ரேஷன் கடைகளில் இந்த பொங்கல் தொகுப்பு பொருட்கள் தீவிரமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இது குறித்து முதல்வர் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தரமான பொங்கல் பரிசு கிடைப்பதை அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும், இதில் எந்த குளறுபடியும் ஏற்பட்டு விடக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

பல மாவட்டங்களில், தரமற்ற பொங்கல் தொகுப்பு  பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், முதல்வர் இந்தப் புதிய உத்தரவை பிறப்பித்து இருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here