தமிழகத்தில் பொங்கல் பரிசு விநியோகம்., இந்தப் பொருள் எல்லாம் எங்க காணோம்? காண்டான மக்கள்!!

0
தமிழகத்தில் பொங்கல் பரிசு விநியோகம்., இந்தப் பொருள் எல்லாம் எங்க காணோம்? காண்டான மக்கள்!!
தமிழகத்தில் பொங்கல் பரிசு விநியோகம்., இந்தப் பொருள் எல்லாம் எங்க காணோம்? காண்டான மக்கள்!!

தமிழக ரேஷன் பயனர்களுக்கு, விநியோகிக்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் இந்த பொருட்கள் எல்லாம் இல்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.

பகிரங்க குற்றச்சாட்டு:

தமிழகத்தில் ரேஷன் பயனர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. வரும் ஜனவரி 12 ஆம் தேதிக்குள், இந்த பரிசுத் தொகுப்பை விநியோகம் செய்து முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தமிழக வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நியாய விலை கடையில், ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் சாமான்கள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். அதன் பிறகு இந்த பொருட்களை பெற்ற பயனர் ஒருவரிடம், பொருட்களெல்லாம் எப்படி இருக்கு என கேட்டுள்ளார்.

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்., இனி உங்க whatsappலயே எல்லாம் வந்திடும்! அரசின் சூப்பர் அறிவிப்பு!!

அதற்கு அவர் அரிசி, சர்க்கரை மட்டும் தான் உள்ளது. பொங்கலுக்கு தேவையான திராட்சை, ஏலக்காய், முந்திரி என எதுவும் இல்லை என குற்றம் சாட்டினார். அதற்கு அந்த மாவட்ட ஆட்சியர், அதற்குத்தான் இந்த ரூ. 1000 ரொக்க பணம் என நகைச்சுவையாக பதில் அளித்தார். இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here