பொங்கல் பரிசு தொகுப்புடன் இதையும் சேர்த்து கொடுத்தா நல்லா இருக்கும் – அரசுக்கு வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை!!

0

தமிழகத்தில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து, இரண்டு மண் பானைகளும் வழங்கப்பட வேண்டும் என அரசுக்கு முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

முக்கிய கோரிக்கை :

தமிழகத்தில் ஆண்டுதோறும், குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் பொருட்கள் அடங்கிய பை கொடுக்கப்படுவது வழக்கம். இதோடு சேர்த்து, கரும்பு துண்டு மற்றும் பண பரிசு கொடுக்கப்படும். இந்த நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பொருட்களுடன் சேர்த்து, பருப்பு வகைகள், உப்பு, புளி, மிளகாய் தூள் உள்ளிட்ட பலசரக்கு பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அண்மையில் தெரிவித்தார்.

இதனை அடுத்து, இந்த திட்டத்தை நாளை துவக்கி வைக்க உள்ளார் முதல்வர். இந்த நிலையில், தற்போது தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பொங்கல் வைக்கும் பானைகள் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த தொழிலை பாதுகாக்க இனி ஆண்டுதோறும் இந்த பொருட்களோடு இரண்டு பானைகளும் மக்களுக்கு நியாய விலை கடைகள் வாயிலாக கொடுக்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தற்போது அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here