இந்த ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கி உத்தரவிட்ட ஸ்டாலின் – விரிவான அறிக்கை வெளியீடு!!

0

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 7 கோடியே 1 லட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்க பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

ஸ்டாலின் அறிவிப்பு :

தமிழகத்தில் உள்ள சிறிய கிராமம் முதல் மாநகராட்சி எல்லை உட்பட அனைத்து ஊர்களுக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக தடையில்லா பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு  சாதனை ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதாவது கடந்த 2021-ஆம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் 151 நாட்கள் வரை குறைவாக பணி செய்த ஊழியர்களுக்கு 85 ரூபாயும், 151 நாட்கள் மற்றும் 200 நாட்கள் குறைவாக பணி செய்த ஊழியர்களுக்கு 195 ரூபாயும், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணி செய்த ஊழியர்களுக்கு 625 ரூபாயும் சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதற்காக, 7 கோடியே 1 லட்சம் ரூபாய்  ஒதுக்கப்பட்டு, இதன்மூலம் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1 லட்சத்து 19 ஆயிரத்து  161 பணியாளர்கள் பயனடைய உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here