மாநிலத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் – அதிர்ச்சியில் மது பிரியர்கள்!!

0

புதுச்சேரியில் மாநிலத்தில் கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்ற புதிய வகை அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் விதிப்பு :

நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து வகையான உணவகங்கள்,  ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் 50% வாடிக்கையாளர்களுடன்  மட்டுமே இயக்க அனுமதிக்கப்படுகிறது. மாநிலத்தில் உள்ள திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும், தமிழ்நாடு உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு வாகன கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்தில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாகவும், கலை நிகழ்ச்சி மற்றும் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில்களில் குடமுழுக்கு நடத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுபோக டாஸ்மாக் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், மதுப் பிரியர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here