இப்படி பண்ணா எங்கிருந்து கொரோனா குறையும்?? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!!

0

தமிழகத்தில் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. ஆனால் இதனை சிறிதும் கூட கவனிக்காமல் அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தமிழகம்:

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது பரவ தொடங்கியுள்ளது. ஏனெனில் கடந்த மூன்று மாத காலத்தில் இல்லாத கொரோனா தொற்று கடந்த மூன்று நாட்களாக அதிகமாக பரவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை மக்களை மாஸ்க் அணிந்து மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி வருகிறது. இதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

dmk election

இந்நிலையில் தமிழகத்தில் வருகிற 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை மிக விரைவாக செய்து வருகின்றனர். தற்போது அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சார வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அந்த பிரச்சாரத்தில் எந்த ஒரு கட்சியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கவில்லை.

aiadmk election

9,10 மற்றும் 11 வகுப்பு ஆல் பாஸ் ரத்தா?? ஐகோர்ட் அதிரடி!!

அரசியல் தலைவர்களை காண வரும் தொண்டர்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக அலைமோதி வருகின்றனர். மேலும் அவர்கள் மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது இல்லை. ஆட்சிக்கு வந்தால் இதை செய்வேன், அதை செய்வேன் சொல்லும் அரசியல் தலைவர்களே கொரோனா பரவுவதற்கு வழிவகை வித்திட்டால் தமிழக மக்கள் மற்றும் தமிழகத்தில் நிலை என்ன ஆகும் என்று நினைத்து பார்த்தல் கூட அச்சமாக உள்ளது. இந்த நிலை எப்போது மாறும் என்பதை காத்திருந்து பாப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here