நகைச்சுவை நடிகர் விவேக் மறைவு – அரசியல் தலைவர்கள், திரை உலகினர் இரங்கல்!!

0

தமிழ் சினிமாவின் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். தற்போது அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா துறையினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விவேக்

தமிழ் சினிமாவின் மிக முக்கிய நகைச்சுவை நடிகரான விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணி அளவில் காலமானார். இவரது மறைவு தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில் நடிகர் விவேக்கின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை உலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

திரை உலகினர் இரங்கல்

எங்கள் இதயங்களில் நீங்கள் வாழ்வீர்கள் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் தெரிவித்துள்ளார். அதேபோல் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் விவேக் என்று சத்யராஜும், விவேக்கின் மறைவு நம்ப முடியவில்லை என்று நடிகர் ஹரிஷ் கல்யாண், நல்ல மனிதரை நாம் இழந்துவிட்டோம் என்று நடிகர் யோகிபாபுவும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். மேலும் நடிகர் சூர்யா, ஜோதிகா ஆகியோர்கள் நேரில் சென்று விவேக்கின் உடலுக்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர். மேலும் விவேக்கின் மறைவு வேதனை அளிக்கிறது என்று ரஜினிகாந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மேலும் 2,34,692 பேருக்கு கொரோனா- 1,341 பேர் பலி!!

அரசியல் தலைவர்கள் இரங்கல்

நடிகர் விவேக் தனித்துவம் கொண்டவர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அஞ்சலியை செலுத்தினார். இவரை தொடர்ந்து டி.டி.வி. தினகரன் கூறியதாவது, விவேக்கின் இழப்பு தமிழ் சினிமா மட்டுமன்றி தமிழ் சமூகத்திற்கே இழப்பு என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார். சமூக நலனை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டவர் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here