தனுஷுடன் நெருக்கமாக இருக்கும் அந்த நடிகை?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0
தனுஷுடன் நெருக்கமாக இருக்கும் அந்த நடிகை?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!
தனுஷுடன் நெருக்கமாக இருக்கும் அந்த நடிகை?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் வெளியாகும் படங்களை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் பட்டாளமே இப்போது வரை காணப்படுகிறது. இவர்களது கூட்டணியில் முதன் முதலாக பொல்லாதவன் படம் வெளியாகியது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து வடசென்னை, அசுரன், ஆடுகளம் போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில் பொல்லாதவன் படத்தில் தனுஷ், திவ்யா ஸ்பந்தனாவின் காம்போவை இப்போது வரை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு இவர்களது கெமிஸ்ட்ரி சூப்பராக அமைத்திருந்தது. இது தவிர இப்படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெடித்த பூகம்பம்.., தனலட்சுமி செய்தது தான் தவறா??

இதனால் இந்த கம்போ மீண்டும் இணைந்து எப்போது படம் நடிப்பார்கள் என்று ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் பொல்லாதவன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதனால் இப்படத்தின் 15 ஆம் ஆண்டு வெற்றி விழாவை வெற்றிமாறன், தனுஷ், திவ்யா ஸ்பந்தனா உள்ளிட்டோர் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் இப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் தனுஷ், திவ்யா ஸ்பந்தனா இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இன்னும் நீங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸா இருக்கீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here