‘தமிழக பெண்களின் ஊதியத்தில் பாகுபாடு.., நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு வலியுறுத்தும் அன்புமணி!!

0
'தமிழக பெண்களின் ஊதியத்தில் பாகுபாடு.., நடிவடிக்கை எடுக்க முதல்வருக்கு வலியுறுத்தும் அன்புமணி!!
'தமிழக பெண்களின் ஊதியத்தில் பாகுபாடு.., நடிவடிக்கை எடுக்க முதல்வருக்கு வலியுறுத்தும் அன்புமணி!!

தமிழகத்தை ஆட்சி செய்து வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பெண்களின் நலனை கருத்தில் கொண்டு ஏகப்பட்ட நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் பெண்களுக்கான இலவச பேருந்து வசதி என சில திட்டங்களை நடைமுறை படுத்தியுள்ளார். மேலும், செப்டெம்பர் 15 ஆம் தேதி முதல் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படவுள்ளது. இப்படி பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தி வரும் நம் முதல்வருக்கு பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது தமிழகத்தில் தனியார் துறைகளில் கிராமப்புறங்களில் வேலை பார்க்கும் ஆண்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 53% சதவீதத்தை தான் பெண்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. மேலும் ஆண்களின் ஊதியத்தில் 65% நகர்ப்புறங்களில் பணி பணிபுரியும் பெண்களின் ஊதியமாக வழங்கப்படுகிறது என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கபட்டு சொத்தில் சம உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற சட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது.

காதல், சிவகாசி படத்துல நடிச்ச அருண்குமார் நியாபகம் இருக்கா?? அவருக்கா இப்படி ஒரு நிலைமை??

இப்படி ஆணுக்கும் பெண்ணும் இடையில் சமத்துவம் பேசும் நம் தமிழக மண்ணில் பெண்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கொடுக்க வேண்டும். உழைப்பு நேரம் திறமை எல்லாம் ஆண்களுக்கு இணையாக பெண்கள் கொடுத்து வரும் நிலையில் ஊதிய வழங்கும் முறையில் பாகுபாடுகள் இருக்க கூடாது. மேலும் இதற்கு அதிரடி நடவடிக்கை எடுத்து ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here