
தற்போதைய காலகட்டத்தில் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதை தடுக்க பல கடுமையான சட்டங்கள் அரசாங்கம் கொண்டு வந்த போதிலும், தற்போது வரை குற்றங்கள் குறைந்த பாடில்லை. இந்நிலையில் கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயிலில் சென்ற போது காவலர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது தாம்பரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணிபுரிந்து வரும் கருணாகரன் என்பவர் அந்த ரயிலில் பயணித்த பெண் IT ஊழியரிடம் தகாத முறையில் நடந்தது மட்டுமின்றி, தனது அந்தரங்க உறுப்பை காட்டி மோசமாக நடந்து கொண்டுள்ளார். இதை அனைத்தையும் அந்த பெண் வீடியோ தைரியமாக வீடியோ எடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். காவலரே இவ்வாறு நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மது பிரியரியர்களே.., டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை குறையும்.., அதிகாரிகள் பகீர் அறிவிப்பு!!!