Friday, April 19, 2024

என்ன கொடுமை சார் இது!! ஆட்டை அரெஸ்ட் செய்த போலீஸ்!!

Must Read

முகக்கவசம் அணியவில்லை எனக் கூறி, ஆட்டை போலீஸ் அரெஸ்ட் செய்த நகைச்சுவை சம்பவம் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

முகக்கவசம் கட்டாயம்

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு, முகக்கவசம் அணியாதவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தும் வருகின்றனர்.

‘யூ ஆர் அண்டர் அரெஸ்ட்’

உத்தரப்பிரதேச மாநில பிகான்கஞ்ச் பகுதியில் ஆடு ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. இதனை கவனித்த கான்பூர் நகர காவல் நிலைய போலீஸார், அந்த ஆடு முகக்கவசம் அணியவில்லை எனக்கூறி, அதனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

முக்கியமான செய்தி ⇛⇛ வேலை தேடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி!!!

இதனை கேள்விப்பட்ட ஆட்டின் உரிமையாளர், அலறி அடித்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்துள்ளார்.

நாய்கள் அணியும்போது ஆடு மட்டும் ஏன் கூடாது??

அவரிடம், “ஆட்டுக்கு மாஸ்க் அணிவிக்காமல் பொதுமுடக்க விதிமீறல் செய்துள்ளீர்கள். தற்போதைய கொரோனா காலத்தில் நாய்களுக்கே அவற்றின் உரிமையாளர்கள் முகக்கவசம் அணிவித்துதான் வெளியே அழைத்து வருகின்றனர். அப்படியிருக்கும்போது, ஆட்டுக்கு மாஸ்க் அணிவிக்க முடியாதா? என்று போலீஸார் தங்கள் கடமையை செய்துள்ளனர்.

உடனே, ஆட்டின் உரிமையாளர் மன்னிப்புக் கேட்டு இனி இவ்வாறு நிகழாது என உறுதி அளித்ததும், சரி ஆட்டை கூட்டிட்டு போ என்று பெரிய மனதுடன் போலீசார் அந்த ஆட்டை விடுத்துள்ளனர்.

சமூகவலைத்தளங்களில் கிண்டல்

இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி மீம்ஸ் கிரியேட்டர்களால் கிண்டல் செய்ததை அடுத்து, “ஒரு இளைஞன் முகக்கவசம் அணியாமல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். போலீசை கண்டதும் ஆட்டை அம்போவென விட்டுட்டு அந்த இளைஞன் எஸ்கேப்” ஆனார்.

அதனால்தான் ஆட்டை பிடித்து ஸ்டேஷனில் வைக்க வேண்டியதாகிவிட்டது” என்று போலீஸார் தற்போது சமாளித்து வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -