பிரபல கவிஞர் மறைவு – சற்றுமுன் நடந்த சோகம்: அதிர்ச்சியில் மக்கள்!!

0

பிரபல கவிஞராகவும், அதிமுக முன்னாள் அவைத் தலைவராக இருந்த புலமைப்பித்தன் சென்னையில் இன்று காலமானார்.

கவிஞர் மறைவு:

தமிழகத்தின் பிரபல கவிஞராகவும், சட்டமன்றத்தின் அவை தலைவராகவும் இருந்த புகழ்பெற்ற கவிஞர் புலமை பித்தன் இன்று வயது முதிர்வால் காலமாகி உள்ளார். அவருக்கு வயது 84 என்பது குறிப்பிடத்  தகுந்தது.   தனது இளம் வயது முதல் சினிமாவில் சிறந்த பாடல்களை எழுதியவர் கவிஞர் புலமைப்பித்தன்.  இவர் எழுதி புரட்சி தலைவர் எம் ஜி ஆர் நடித்த குடியிருந்த கோயில் படத்தில் “நான் யார், நான் யார்” என்ற பாடல் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

 

ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட புலமைப்பித்தன், சில நாட்கள் சென்னை சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிந்து உள்ளார்.  இது மட்டுமல்லாமல், நான்கு முறை தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதும் பெற்று சாதனை படைத்துள்ளார்.  இவரின் இந்த மறைவு திரை உலகத்தின் மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக உடல் நலமின்மை ஆல் தவித்து வந்த கவிஞர் புலமைப்பித்தன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இன்று காலை சிகிச்சை  பலனின்றி அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கவிஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here