Thursday, March 28, 2024

உர உற்பத்திப் பிரிவு வர்த்தகத்தை எளிதாக்க அரசு முயற்சி!!

Must Read

உர உற்பத்திப் பிரிவில் வர்த்தகத்தை எளிதாக மேற்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது.

அரசு முயற்சி

உர உற்பத்திப் பிரிவில் வர்த்தகத்தை எளிதாக மேற்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது என்று மத்திய வேதிப்பொருள்கள் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு டி.வி.சதானந்தா கௌடா தெரிவித்தார்.

டி.பி.டி 2.0 (DBT 2.0) பதிப்பு

அரசு எடுத்துள்ள பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை விரிவாக எடுத்துரைத்த திரு. கௌடா உரங்கள் துறை ஜுலை 2019இல் தற்போதுள்ள விவசாயிகளுக்கு மிகவும் ஏற்ற முறையிலான டி.பி.டி 2.0 (DBT 2.0) பதிப்பை அறிமுகப்படுத்தியது. 

பி.ஓ.எஸ் 3.0 (PoS 3.0) 

டி.பி.டி 2.0 (DBT 2.0 ) பதிப்பில் டி.பி.டி டேஷ்போர்ட், பிஓஎஸ் 3.0 மென்பொருள் மற்றும் டெஸ்க்டாப் பி.ஓ.எஸ் பதிப்பு என 3 கூறுகள் உள்ளன.

பி.ஓ.எஸ் 3.0 (PoS 3.0) மென்பொருள் பல்வேறு வகையான நுகர்வோர்களுக்கு உரங்கள் விற்கப்படுவதை பதிவுசெய்து பல மொழிகளில் விற்பனை ரசீதுகளை உருவாக்குகிறது.

ஸ்கோட்ச் தங்க விருது

மேலும் உரங்களை சமநிலையில் பயன்படுத்துவதை மேம்படுத்தும் வகையில் மண்வளப் பரிந்துரைகளை இது விவசாயிகளுக்கு வழங்குகிறது. ஆறு மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்ற ‘வெட்டுக்கிளிகள்’ ஒழிக்கும் பணிகள்

உரங்களுக்கான டி.பி.டி 25-9-2019இல் அரசாள்கைக்கான ஸ்கோட்ச் தங்க விருது மற்றும் 6-11-2019இல் ”அரசாள்கை இப்போது” என்ற டிஜிட்டல் உருமாற்ற விருது என 2 விருதுளைப் பெற்றுள்ளது.

திரு.கௌடா அறிவிப்பு

நாட்டில் உரங்களுக்கான விநியோக வலைப்பின்னலை எளிமைப்படுத்துவதற்காக அரசு எடுத்துள்ள முயற்சிகளைச் சுட்டிக்காட்டிய திரு.கௌடா சரக்கைக் கையாள்வதற்கான கூடுதல் பயண முறையாக கடலோர நகரங்களுக்கு இடையிலான சரக்குக் கப்பல் பயணம் சேர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.

மானிய விலையிலான உரங்கள்

மானிய விலையிலான உரங்களை கடலோர நகரங்களுக்கு இடையிலான கப்பல் பயணம் அல்லது / மற்றும் உள்நாட்டு நீர்வழிப்பயணம் வழியாக விநியோகிப்பதில் சரக்கு மானியத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும் கொள்கை 17-6-2019 மற்றும் 18-9-2019இல் அறிவிக்கப்பட்டது. 2019 – 2020ஆம் ஆண்டுக் காலத்தில் 1.14 எல்.எம்.டி உரங்கள் கடலோர நகரங்களுக்கு இடையில் சரக்குக் கப்பல் மூலம் கையாளப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளுக்கு ரூ.350/மெட்ரிக் டன்

திருத்தி அமைக்கப்பட்ட என்.பி.எஸ்– IIIஐ சிக்கல் இல்லாமல்  உரங்கள் தயாரிக்கும் 30 தொழிற்சாலைகளுக்கு ரூ.350/மெட்ரிக் டன் என்ற அளவில் கூடுதல் நிர்ணயச் செலவை மானியமாக அளிக்க முடியும்.

யூரியா உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு ரூ.150/மெட்ரிக் டன்

மேலும் 30 ஆண்டுகளுக்கும் மேல் பழமையாக உள்ள மற்றும் கேஸ் தொழில்நுட்பத்திற்கு மாறியுள்ள யூரியா உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு ரூ.150/மெட்ரிக் டன் என்ற அளவில் சிறப்பு நிவாரண மானியம் அளிக்கவும் உதவும்.

தொடர்ச்சியான உற்பத்தியைத் தரும் வகையில் இந்தத் தொழிற்சாலைகள் செயல்படுவதற்கு இந்த மானிய உதவி வழி வகுக்கும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மாதம் ரூ. 10 லட்சம் சம்பள வேலையை விட்டுட்டோம்.. கோபிநாத் கேட்ட கேள்வி.. பெண் கூறிய பதில் என்ன??

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் விவாத நிகழ்ச்சியில் ஒன்று நீயா நானா. கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில், இந்த வாரம் நவீன கார்ப்பரேட்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -