இந்துத்துவா வீர சாவர்க்கரின் பிறந்தநாள் – ‘தலைவணங்குகிறேன்’ என பிரதமர் மோடி புகழாரம்..!

0

வீர சாவர்க்கரின் பிறந்தநாளான இன்று அவருக்கு தலைவணங்குகிறேன் என பிரதமர் மோடி அவர்கள் ஒரு வீடியோவுடன் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

வீர சாவர்க்கர் பிறந்தநாள்:

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்துத்துவா சித்தாந்த வீரரான வீர சாவர்க்கரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அவரின் பதிவில், “வீர சாவர்க்கரின் பிறந்த நாளில் அவரது துணிவிற்கு நான் தலை வணங்குகிறேன். அவரது துணிச்சல், சுதந்திர போராட்டத்தில் பலரும் இணைய அவர் அளித்த ஊக்கம், சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்திய பண்பு ஆகியவற்றுக்காக அவரை நாம் நினைவு கூர்கிறோம்” என்று தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெயியிட்டு உள்ள பிரதமர் மோடி அவர்கள், அதில் வீர சாவர்க்கரின் சுதந்திர போராட்டத்திற்கு ஆற்றிய பணிகள், சாதனைகளையும் பட்டியலிட்டு விவரித்து உள்ளார். அதில் 2018ம் ஆண்டு அவரின் மான்கிபாத் உரையில் பேசியதை இணைத்துள்ளார். 1857ம் ஆண்டு நடந்தது ஒரு கிளர்ச்சி இல்லை, அது ஒரு சுதந்திர போராட்டம் என அனைவர்க்கும் உணர்த்தியது வீர சாவர்க்கர் தான் என தெரிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here