இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஒரு செய்தி சொல்கிறேன் – பிரதமர் மோடி ட்வீட்!!

0

பிரதமர் மோடி அவர்கள் இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில், பிரதமர் மோடி அவர்கள் என்ன தகவல் சொல்லப் போகிறார்?? என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பிரதமர் மோடி உரை:

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொது முடக்கம் நீட்டிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். மேலும் ஒவ்வொரு மாதமும் வானொலியில் மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் கடந்து விட்ட நிலையில், இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் நாட்டு மக்களிடம் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள உள்ளார்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

modi speech about national education policy
pm modi 

நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் – கொந்தளிப்பில் ரசிகர்கள்!!

கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் குறையத் தொடங்கி உள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி பரிசோதனைகளும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தீபாவளி போன்ற பண்டிகைகள் நெருங்கி வருகின்றன. இதனால் பிரதமர் மோடி இன்றைய உரையில், மக்கள் பண்டிகை காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது குறித்தும், கொரோனா தடுப்பூசி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here