நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.., அவையில் பிரதமர் மோடியின் அதிரடி உரை!!!

0
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.., அவையில் பிரதமர் மோடியின் அதிரடி உரை!!!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.., அவையில் பிரதமர் மோடியின் அதிரடி உரை!!!

2023ம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் இன்று துவங்கியதை தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்

2022-23 நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 31) நாடாளுமன்ற அவையில் கூடியது. ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் என்பதால் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கப்பட்டது. இதில் இந்திய அரசுகளின் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து குடியரசு தலைவர் உரையாற்றினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் நாளை (பிப்ரவரி 1) நடைபெற உள்ள மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் அதீத கவனம் செலுத்தும் பட்ஜெட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு ஊழியருக்கு 6 கோடி ரூபாய் போனஸ்.., அதிரடி காட்டிய பிரபல நிறுவனம்!!!

இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், “பழங்குடியின இனத்தை சேர்ந்த குடியரசு தலைவர் உரையாற்றி துவக்கி வைத்தது நாட்டுக்கே பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது. மேலும் நாட்டின் வளர்ச்சிக்கான மத்திய பட்ஜெட்டை ஒரு பெண் தாக்கல் செய்யவுள்ளதை உலகமே உற்று நோக்குகிறது. எனவே இந்த பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமையும்.” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here