உலகின் முன்னணி தகவல்தொடர்பு செயலியான வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு பல புதிய அம்சங்களை அவ்வப்போது வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ள வாட்ஸ்அப் சேனல் அம்சம் அதிக எண்ணிக்கையிலான பயனர்களை ஒரே நேரத்தில் இணைக்க அனுமதிக்கிறது. வாட்ஸ்அப்பின் இந்த அம்சத்தில் பிரதமர் நரேந்திர மோடி இணைந்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த அம்சத்தில் இணைந்த பிரதமர், ‘வாட்ஸ்அப் சேனலில் இணைவதில் மகிழ்ச்சி. இது மக்களுடன் நெருங்கிப் பழகவும், தொடர்புகளை அதிகரிக்கவும் புதிய வாய்ப்பு’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.