இந்தியாவில் விரைவில் 5ஜி மொபைல் சேவை – பிரதமர் மோடி உறுதி!

0
இந்தியாவில் விரைவில் 5ஜி மொபைல் சேவை - பிரதமர் மோடி உறுதி!
இந்தியாவில் விரைவில் 5ஜி மொபைல் சேவை - பிரதமர் மோடி உறுதி!
இந்தியாவில் விரைவில் 5ஜி மொபைல் சேவை – பிரதமர் மோடி உறுதி!

இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை தொடங்கப்படும் என்று 75 வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் இந்திய கிராமங்கள் ஆப்டிகல் ஃபைபருக்கான அணுகலைப் பெறும் என்றும் நாட்டில் உள்ள ஒவ்வொரு மூலையிலும் இணையம் சென்றடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

5ஜி மொபைல் சேவை:

இந்தியாவில் 5ஜிக்கான ஏலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கேபினட் குழு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒப்புதல் வழங்கியது. உலகம் முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் செல்போன் தொழில்நுட்பம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது. வளர்ச்சிக்கு ஏற்ப இணையதள வேகத்தை அதிகரிக்க அலைவரிசையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 5ஜி அலைவரிசை மூலம் சேவைகள் கிடைத்தால் தற்போது அமலில் உள்ள 4ஜி அலைவரிசையை விட 10 மடங்கு அதிக வேகத்தில் இணையதள வசதிகளும் 3ஜி யை விட 30 மடங்கு அதிக வேகத்தில் இணைய வசதிகளும் நமக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் நேற்று முன்தினம் தேசியக் கொடியை ஏற்றி வைத்த, பிரதமர் மோடி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன்பின் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியது,“ இந்தியாவில் தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பம், ஒவ்வொரு துறையிலும் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான காலம் இதுவாகும். இந்தியாவில் 5ஜி சேவை, செமிகன்டக்டர் உற்பத்தி, கிராமங்களில் கண்ணாடி இழைக் கேபிள் என கிராமங்களில்கூட டிஜிட்டல் இந்தியா மூலம் புரட்சியை நாம் கொண்டு வந்துள்ளோம்.

மேலும் செமிகன்டக்டர்ஸ், 5ஜி நெட்வொர்க், ஆப்டிகல் பைபர் ஆகியவை கல்வி, சுகாதார வசதிகள், சாமானிய மக்களின் வாழ்க்கை ஆகிய 3 பிரிவுகளில் வலிமையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அடிமட்டத்திலிருந்து தொழில்துறை வளர்ச்சியும் வரும். நம்முடைய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், தெருவோர வியாபாரிகள், அமைப்பு சார்ந்த துறையில் பணியாற்றுவோர் ஆகியோரை வலிமைப்படுத்த வேண்டியது அவசியம். மேலும் ஊழலுக்கு எதிராகச் செயல்படுவது குறித்த விழிப்புணர்வை தீவிரப்படுத்தப்பட வேண்டும். முழுவீச்சுடன் ஊழலுக்கு எதிராகப் போராட வேண்டும் என கூறினார். கடந்த 8 ஆண்டுகளில், ஆதார், நேரடி பணமாற்று திட்டம், செல்போன்கள் ஆகியவற்றை பயன்படுத்தி, ரூ.2 லட்சம் கோடி கருப்பு பணம் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here