பிரதமர் மோடி பிறந்த நாள் – தடுப்பூசி செலுத்துவதில் இமாலய சாதனை படைத்த மத்திய அரசு!!

0
மோடி பிறந்த நாள் - தடுப்பூசி செலுத்துவதில் இமாலய சாதனை படைத்த மத்திய அரசு!!
மோடி பிறந்த நாள் - தடுப்பூசி செலுத்துவதில் இமாலய சாதனை படைத்த மத்திய அரசு!!

பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று மதியம் 1.30 மணிக்குள் ஒரு கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முக்கிய சாதனை:

பிரதமர் நரேந்திர மோடி இன்று தன்னுடைய 71 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையடுத்து, கடந்த 7 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக இருந்து வரும் மோடிக்கு பாஜக வின் தொண்டர்கள் சார்பாகவும், பல்வேறு அரசியல் தலைவர்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமில்லாமல், இவரது பிறந்தநாளை முன்னிட்டு 20 நாட்களுக்கு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்ய இருப்பதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.

மோடி பிறந்த நாள் - தடுப்பூசி செலுத்துவதில் இமாலய சாதனை படைத்த மத்திய அரசு!!
மோடி பிறந்த நாள் – தடுப்பூசி செலுத்துவதில் இமாலய சாதனை படைத்த மத்திய அரசு!!

இந்த நிலையில், பிரதமரின் பிறந்தநாளான இன்று நாடு முழுவதும் மதியம் 1.30க்குள் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்த இமாலய சாதனையை மத்திய அரசு செய்துள்ளதாகவும், இந்த சாதனையை பிரதமரின் பிறந்தநாள் பரிசாக நாம் அர்பணிப்போம் எனவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மோடி பிறந்த நாள் - தடுப்பூசி செலுத்துவதில் இமாலய சாதனை படைத்த மத்திய அரசு!!
மோடி பிறந்த நாள் – தடுப்பூசி செலுத்துவதில் இமாலய சாதனை படைத்த மத்திய அரசு!!

இந்த நிலையில், இந்த தடுப்பூசி சாதனை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இது போன்ற சாதனைகள் மேலும் நிகழ்ந்தால் மிகுந்த பயனை தரும் என்பதே மக்களின் பலத்த எதிர்பார்ப்பாக உள்ளது. ஒரு மாதத்தில் ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசிக்கும் அதிகமாக மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here