கொரோனவை விரட்ட நிதி தாருங்கள் – மக்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள்..!

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதால் ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரோனவால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை அளிக்குமாறு பிரதமர் மோடி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

தீவிர நடவடிக்கைகள்..!

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும், மருத்துவ சிகிச்சைக்கும் 1.70 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா எப்படி அழியும் தெரியுமா?? விஞ்ஞானிகள் கூறிய நற்செய்தி.!

இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் கொரோனவை நாட்டில் இருந்து விரட்ட மக்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை அளிக்குமாறு தெரிவித்து உள்ளார்.

  • அக்கவுண்ட் பெயர்- PM CARES, நம்பர் – 2121PM20202, IFSC – SBIN0000691 இல் மக்கள் நிதியுதவி அளிக்கலாம்.
  • வெளிநாடு வாழ் இந்தியர்கள் SWIFT CODE – SBININBB104 இல் நிதியுதவி அளிக்கலாம்.
  • ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, நியூ டெல்லி கிளையில் மக்கள் தங்களால் முடிந்த நிதியுதவிகளை அளிக்கலாம்.
  • ஆன்லைன் மூலம் UPI ID – pmcares@sbi இல் நிதி அளிக்கலாம்.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here