இந்தியாவில் உள்ள முஸ்லீம் பெண்களின் கல்வி நிலை உயர்ந்துள்ளது – பிரதமர் மோடி!!

0

பிரதமர் மோடி அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டு பேசினார். அதன் ஒரு பகுதியாக நினைவு தபால் தலையும் வெளியிட்டார். பிரதமர் மோடியின் உரையிலிருந்து, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் தொடர்புடைய கல்வி வரலாறு ஆனது இந்திய பாரம்பரியத்தில் மதிப்பு மிக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எனது பல வெளிநாட்டு பயணங்களின் போது இந்த பல்கலைக்கழகத்தில் படித்த பல முன்னாள் மாணவர்களை சந்தித்து உள்ளேன். அப்போது தாங்கள் அலிகர் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் எனபதை பெருமையுடன் கூறுவார்கள். இப்பல்கலை கழகத்தின் மாணவர்கள் உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும், இந்தியாவின் பெருமை மிக்க கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றனர்.

மேலும் கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் முஸ்லீம் பெண்களின் பள்ளி இடைநிற்றல் 70% இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கையானது தூய்மை இந்தியா, கிராமங்களில் கழிப்பறை கட்டுதல் மற்றும் பெண்களின் பள்ளியில் கழிப்பறை கட்டியது போன்ற நடவடிக்கைகள் மூலம் 30% ஆக குறைந்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த பல்கலைக்கழகம் இலவசமாக தேர்வு நடத்தியது. தனிமை வார்டுகள் அமைத்தது. பிஎம் கேர்க்கு நிதி உதவி செய்தது. இது போல் இந்த சமூகத்திற்கு செய்த உதவிகள் அனைத்தும் பாராட்டிற்குரியது. இவை எல்லாம், சமூகத்திற்கு நீங்கள் அளித்த உறுதியை நிறைவேற்றுவதில் உள்ள உறுதித்தன்மையை காட்டுகிறது.

பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!!

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகமானது ஒரு நகரத்தைப் போல் உள்ளது என பலர் என்னிடம் கூறியுள்ளனர். இங்கு உள்ள துறைகள்,விடுதிகள், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களை பார்க்கும் பொது இது எனக்கு ஒரு மினி இந்தியாவை நியாபகப்படுத்துகிறது. இங்கு உள்ள பன்முகத்தன்மை ஒட்டு மொத்த நாட்டிற்கும் பலமாக உள்ளது. இந்த பன்முகத்தன்மையின் பலத்தை மறக்கக் கூடாது. பலவீனப்படுத்த முடியாது. தேசம் வளர்ச்சி பெறவும் அதற்கான பணிகளில் ஈடுபடவும் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்.

இந்நிகழ்ச்சியில் ஏ.எம்.யூ சான்ஸ்லர் சையத்னா முபாடல் சைபுதீன் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here