5 வருடம், 58 நாடுகள், 518 கோடி ரூபாய் – பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு!!

0

2015 மற்றும் 2019ம் ஆண்டுகளுக்கு இடையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 58 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இதற்காக மொத்தம் 517.82 கோடி ரூபாய் செலவாகி உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் முரளீதரன் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர்:

கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வேளாண் மசோதாவிற்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து பிற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நேற்று அவைக்கு வரவில்லை. இருப்பினும் நேற்று மட்டும் 8 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. பிரதமர் மோடி அவர்களின் வெளிநாட்டு பயணங்கள் குறித்த கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் முரளீதரன் பதில் அளித்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் வழங்கிய விவரங்களின்படி, பிரதமர் மோடி அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு தலா ஐந்து முறையும், சிங்கப்பூர், ஜெர்மனி, பிரான்ஸ், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வேறு சில நாடுகளுக்கு பல பயணங்களையும் மேற்கொண்டுள்ளார். கடைசியாக 2019ம் ஆண்டு பிரிக்ஸ் (பிரேசில்-ரஷ்யா-இந்தியா-சீனா-தென்னாப்பிரிக்கா) உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசிலுக்கு பயணம் மேற்கொண்டார்.

வேளாண் மசோதாக்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை – முதல்வர் பேச்சு!!

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த இந்தியாவின் கருத்துக்களை சர்வதேச புரிதல்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பிற நாடுகளுடனான இந்தியாவின் உறவை வலுப்படுத்த இந்த பயணங்கள் உதவியுள்ளன என்று அமைச்சர் முரளீதரன் கூறியுள்ளார். இவை, நமது மக்களின் பொருளாதார வளர்ச்சியையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதற்காக பயன்பட்டதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here