
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசின் பி எம் கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூபாய் 6000 வீதம் மூன்று தவணையாக ரூபாய் 2000 வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான 15வது தவணை தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில் இது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஐந்து மாநிலங்கள் சட்டசபை தேர்தல் கூடிய விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் வாக்குறுதியாக பாஜக ஆட்சிக்கு வந்தால் அடுத்த வருடத்தில் இருந்து விவசாயிகளுக்கு பிஎம் கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூபாய் 6 ஆயிரத்திற்கு பதில் 12 ஆயிரம் வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இதைத் தொடர்ந்து இன்னும் பல அறிவிப்புகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.