பி.எம். கிசான் திட்டம்.., இனி இவர்களுக்கு உதவித்தொகை கிடையாது.., வெளியான பகீர் அறிவிப்பு!!!

0
பி.எம். கிசான் திட்டம்.., இனி இவர்களுக்கு உதவித்தொகை கிடையாது.., வெளியான பகீர் அறிவிப்பு!!!
நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகள் PM கிசான் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். தற்போது வரை விவசாயிகளுக்கு 15 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 16 வது தவணை மார்ச் மாதம் வழங்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது. அதற்கு முன்னதாக இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து விவசாயிகளும் e-KYC ஆவண சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இத்திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது தான் ஆதார் இணைப்பை பலரும் இணைத்துள்ளனர்.
இந்த இணைப்பால் இப்போது PM கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதன்படி ஆதார் இணைப்புக்கு பின் நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை 14 சதவீதமாக குறைந்துள்ளது. குறிப்பாக பஞ்சாபில் 45 சதவீதமும், தமிழகம், ஜார்கண்டில் தலா 30 சதவீதமும், குஜராத்தில் 18 சதவீத பயனாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தற்போது இத்திட்டத்தின் கீழ் இதுவரை பயன் பெற்று வந்த தகுதியற்ற விவசாயிகள் பலருக்கும் இனி உதவித்தொகை வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here