நாட்டில் சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதமரின் PM கிசான் திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு 4 மாதத்திற்கு ஒருமுறை அவர்களது வங்கி கணக்கில் ரூ.2000 செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜூலை மாதம் 14 வது தவணை செலுத்த பட்ட நிலையில் நவம்பர் மாதம் 15 வது தவணை செலுத்தப்பட உள்ளது. இதற்காக சமீபத்தில் கூட e-KYC- யை கட்டாயம் PM கிசான் கார்டுடன் இணைக்க வேண்டும் என சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் 15 வது தவணை வழங்கப்படுவது குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது 15 வது தவணை நவம்பர் மாதம் வழங்கப்பட உள்ள நிலையில் 12ஆம் தேதி தீபாவளி அன்று விவசாயிகளின் நலன் கருதி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.