
நாடு முழுவதும் சிறு குறு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பிரதம மந்திரியின் கிசான் மந்தன் யோஜனா (PM KISAN) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 என ஆண்டுக்கு ரூ,6,000 உதவித்தொகை, அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 14 தவணை வழங்கப்பட்ட நிலையில், தகுதியற்ற விவசாயிகள் சிலர் பயனடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இனி இந்த சீரியலில் இவர் கிடையாது., இவருக்கு பதில் இவர் தான்., வெளியான ஷாக் நியூஸ்!!!
இதையடுத்து 15 வது தவணை தகுதியான விவசாயிகளுக்கு மட்டும் வழங்க e-KYC விவரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தி உள்ளனர். இந்த பணிகளை முடித்தவர்களின் வங்கி கணக்கில் இம்மாத (நவம்பர்) இறுதிக்குள் 15 வது தவணை 2000 ரூபாய் வரவு வைக்கப்படும் என தகவல் தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகளை மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.