போக்குவரத்து விதியை மீறிய பிரதமர்.., வெகுண்டெழுந்த சர்ச்சையால் அபராதம் விதித்த போலீசார்!!!

0
போக்குவரத்து விதியை மீறிய பிரதமர்.., வெகுண்டெழுந்த சர்ச்சையால் அபராதம் விதித்த போலீசார்!!!
போக்குவரத்து விதியை மீறிய பிரதமர்.., வெகுண்டெழுந்த சர்ச்சையால் அபராதம் விதித்த போலீசார்!!!

வாகன உற்பத்தி பெருகி வருவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால் சிலர் போக்குவரத்து விதிமுறைகளை அலட்சியப்படுத்தி பயணம் செய்வதால் மோசமான விபத்துகளும் உண்டாகுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதுபோன்று 2021ம் ஆண்டு பிரிட்டனில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்ததால் மட்டும் 30% உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்திய வம்சாவளியான பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் காரில் பயணம் செய்கையில் பின் இருக்கையில் அமர்ந்து சீட் பெல்ட் அணியாமல் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவால் பிரதமரே போக்குவரத்து விதிமுறைகளை மீறுகிறார் என பெரும் சர்ச்சை பிரிட்டனில் எழுந்தது.

வாவ், வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அப்டேட்டா? இனி விரலுக்கு கஷ்டம் இல்லாமல் வீடியோ எடுக்கலாம்!!

இதனால் லங்காஷயர் போலீசார் பிரதமர் மீது வழக்கு பதிவு செய்து 100 பவுண்ட் (ரூ.10,000) அபராதம் விதித்தனர். மேலும் ஒரு மாத காலத்திற்குள் அபராதம் செலுத்தாவிட்டால் நீதிமன்றத்தில் 500 பவுண்ட் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும் எனவும் எச்சரித்துள்ளனர். இதனால் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நடந்த சம்பவங்களுக்கு மன்னிப்பு கோரியும் அரசு விதித்த அபராதத்தை செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here