தமிழக பொதுத்தேர்வு மாணவர்களே.., இதை கட்டாயம் செஞ்சுடுங்க.., வெளியான அறிவிப்பு!!

0
தமிழக பொதுத்தேர்வு மாணவர்களே.., இதை கட்டாயம் செஞ்சுடுங்க.., வெளியான அறிவிப்பு!!
தமிழக பொதுத்தேர்வு மாணவர்களே.., இதை கட்டாயம் செஞ்சுடுங்க.., வெளியான அறிவிப்பு!!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் மே 7ஆம் தேதி வெளியானது. இந்த தேர்வில் மொத்தம் 94.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்தனர். தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத் தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியானது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு இன்று முதல் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் “Application for Retotalling/ Revaluation” என்ற பகுதியை க்ளிக் செய்து விண்ணப்பத்தினைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம். மேலும் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இன்று முதல் ஜூன் 3 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவித்துள்ளனர்.

அதே போன்று விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தின் வாயிலாக தங்கள் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக் கொள்ளலாம். இது தவிர மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்குரிய கட்டணத்தையும் அறிவித்துள்ளனர். அதன்படி

மறுகூட்டல்

  • உயிரியல் பாடத்திற்கான கட்டணம் – ரூ.305
  • இதர பாடத்திற்கான கட்டணம் – ரூ.205

மறுமதிப்பீடு

  • ஒவ்வொரு பாடத்திற்கான கட்டணம் – ரூ.505
  • இந்த தேர்வுக் கட்டணத்தை ரொக்கமாக அந்தந்த மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here