பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுமா?? முக்கிய தகவலை வெளியிட்ட தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர்!!

0

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் அதன் பாதிப்பு மற்றும் பரவும் விகிதத்தை குறைக்கும் நோக்கில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் +2 பொது தேர்வு குறித்து நாளை மறுநாள் முடிவு எடுக்கப்படும் என அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

+2 பொது தேர்வு:

நாடு முழுவதும் கொரோனா தொற்று கடுமையாக பாதித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 12ம் வகுப்புக்கான பொது தேர்வு அவசியமா?? என கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளது. கடந்த வருடம் கொரோனா தொற்றினால் பள்ளிகள் அடைக்கப்பட்டது.

எனவே இதுவரை ஆன்லைன் வகுப்புகள் மூலமே மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தபட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு எந்த அளவு உபயோகமாக இருந்தது என தெரியாத நிலையில் தேர்வு வைப்பது சரிதானா?? என்றும், கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் தேர்வு முக்கியம் தானா?? எனவும் பல கேள்விகள் எழுந்துள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தமிழக அரசு சார்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , +2 பொது தேர்வு குறித்து நாளை மறுநாள் முடிவு எடுக்கப்படும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here