மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.., பிளஸ்-2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

0
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.., பிளஸ்-2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.., பிளஸ்-2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு நடந்து முடிந்த நிலையில் கடந்த மே 8ம் தேதி தேர்வு முடிவுகள் ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 47934 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை. எனவே இந்த பொது தேர்வில், பங்கு பெறாத மற்றும் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, சிறப்பு துணைத் தேர்வை கல்வித்துறை அமைச்சர் சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த துணை தேர்வானது, ஜூன் 19 முதல் 26ம் தேதி வரை காலை 10 மணி முதல் 1.15 மணி வரை நடைபெற இருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும் துணை தேர்வு எழுத விருப்பப்படும் மாணவ மாணவியர்கள், அவர்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும் அல்லது தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாகவும் கடந்த மே 11ம் தேதியில் இருந்து விண்ணப்பித்து வருகின்றனர். தேர்வுக் கட்டணம் மற்றும் இணைய பதிவுக் கட்டணம் சேவை மையம் அல்லது பள்ளியில் பணமாக பெறப்படுகிறது.

ஹேய்.., சொத்தை பிரிங்க.., கூச்சமே இல்லாமல் சண்டை போடும் ஐஸ்வர்யா கண்ணன்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!

இந்தத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 20 வரை என தெரிவித்திருந்த நிலையில், தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 12ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் மே 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதையும் மாணவர்கள் தவறவிட்டால் சிறப்பு அனுமதி திட்டத்தில் மே 24 முதல் மே 26 வரை விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here