தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து – முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!!

0

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை ரத்து செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆலோசனை கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அடங்கிய அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்பு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தன. இதனிடையே, மத்திய அரசு சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது. அதனைப் பின்பற்றி சில மாநில அரசுகளும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்துள்ளன.

இதுகுறித்து தமிழகத்தில் பெற்றோர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடையே இணையவழி கருத்துக் கேட்பு நடத்தியதில் 60 சதவீதம் பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.மேலும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பிளஸ் 2 தேர்வு குறித்து மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்களுடன் ஆலோசனை பெற்ற பின்னர் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதற்கான அறிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here