பிளஸ் 2 கணினி தேர்வுக்கு கூடுதல் மதிப்பெண்ணா?? வினாத்தாள் குளறுபடியால் ஆசிரியர்கள் வலியுறுத்தல்!!

0
பிளஸ் 2 கணினி தேர்வுக்கு கூடுதல் மதிப்பெண்ணா?? வினாத்தாள் குளறுபடியால் ஆசிரியர்கள் வலியுறுத்தல்!!
பிளஸ் 2 கணினி தேர்வுக்கு கூடுதல் மதிப்பெண்ணா?? வினாத்தாள் குளறுபடியால் ஆசிரியர்கள் வலியுறுத்தல்!!
தமிழகத்தில், உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்று முடிந்தன. இந்த தேர்வில், கணித பாடத்தில் 47 (b) என்ற கேள்விக்கு பதில் அளிக்க முயற்சித்தால், கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என சமீபத்தில் கல்வித்துறை அறிவித்து இருந்தது.
இந்நிலையில், கடந்த மார்ச் 17ம் தேதி நடைபெற்ற கணினி அறிவியல் தேர்வின் வினா தாளில் ஏற்பட்டுள்ள குளறுபடிக்களுக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதாவது, கணினி அறிவியல் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்களில், ஸ்மால் லெட்டர்ஸுக்கு பதில், கேப்பிடல் லெட்டராக சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
மேலும், SetA, SetB என்பதற்கு Set A, Set B என இடைவெளி விட்டும், ஒரு சில கேள்விகளுக்கு, சாய்ஸ் ஆங்கிலத்தில் சரியாகவும், தமிழில் தவறாகவும் கேட்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அதிகமாக எழுத்து பிழைகள் இருந்து உள்ளதால், மாணவர்கள் தேர்வில் குழம்பி உள்ளனர் என ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இதனால், இனி வரும் தேர்வுகளில் கல்வித்துறை இது போன்ற பிழைகள் ஏற்படாமல் இருக்கவும், தற்போது பிழைகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கணினி ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here