புரோ கபடி லீக்: ஒரு புள்ளி வித்தியாசத்தில் தலைகீழாக மாறிய வெற்றி…, தரவரிசையில் ஏற்பட்ட பகீர் மாற்றம்??

0
புரோ கபடி லீக்: ஒரு புள்ளி வித்தியாசத்தில் தலைகீழாக மாறிய வெற்றி..., தரவரிசையில் ஏற்பட்ட பகீர் மாற்றம்??
புரோ கபடி லீக்: ஒரு புள்ளி வித்தியாசத்தில் தலைகீழாக மாறிய வெற்றி..., தரவரிசையில் ஏற்பட்ட பகீர் மாற்றம்??

புரோ கபடி லீக் தொடரில் புனேரி பல்டன் அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

புரோ கபடி லீக்:

புனேவில் புரோ கபடி லீக் தொடரின் 9 வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், நேற்று புனேரி பல்டன் அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் அணி போட்டியிட்டது. இதில், தமிழ் தலைவாஸ் சார்பாக நரேந்தர் 9 ரைடுகள் சென்று ஒரு போனஸ் புள்ளியுடன் சேர்த்து 10 புள்ளிகளை எடுத்திருத்திருந்தார். இதே போல, புனேரி பல்டன் சார்பாக ஆகாஷ் ஷிண்டே 7 ரைடுகளில் 10 புள்ளிகளை எடுத்து அசத்தி இருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டியில் இரு அணிகளும் ஒரு கட்டத்தில் சம புள்ளிகளுடன் இருக்க, கடைசி நேரத்தில் புனேரி பல்டன் அணி கூடுதலாக ஒரு புள்ளியை எடுத்து வெற்றி பெற்றது. அதாவது, 34 – 35 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸை வீழ்த்தி புனேரி பல்டன் அணி புள்ளி பட்டியலில் 43 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.

பாகிஸ்தானுடன் பைனலில் மோதப்போவது யார்? இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா இன்று பலப்பரீட்சை!!

இதை போன்ற மற்றொரு ஆட்டத்தில், ஹரியானா ஸ்டீலர்ஸ்க்கு எதிராக பெங்களூரு புல்ஸ் அணி 36 – 33 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், பெங்களூரு புல்ஸ் 41 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் 2வது இடத்தை எட்டியது. 11 அணிகள் கொண்ட இந்த புள்ளிபட்டியலில் 12 போட்டிகளில், தலா 5 போட்டியில் வெற்றி தோல்வி அடைந்து 2ல் டிரா செய்து 34 புள்ளிகளுடன் தமிழ் தலைவாஸ் அணி 5 வது இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here