ஒரு புள்ளி வித்தியாசத்தில் வீழ்ந்த பெங்கால் வாரியர்ஸ்…,2 வது இடத்தை பிடித்து UP யோதாஸ் அணி அசத்தல்!!

0
ஒரு புள்ளி வித்தியாசத்தில் வீழ்ந்த பெங்கால் வாரியர்ஸ்...,2 வது இடத்தை பிடித்து UP யோதாஸ் அணி அசத்தல்!!
ஒரு புள்ளி வித்தியாசத்தில் வீழ்ந்த பெங்கால் வாரியர்ஸ்...,2 வது இடத்தை பிடித்து UP யோதாஸ் அணி அசத்தல்!!

புரோ கபடி லீக் தொடரில், பெங்கால் வாரியர்ஸ் அணியை, UP யோதாஸ் அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி 2 வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

புரோ கபடி:

ஹைதராபாத்தில் புரோ கபடி லீக் தொடரின் இறுதி கட்ட சுற்றுகள், 12 அணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகளே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இதனால், அந்த முதல் 6 இடங்களை பிடிக்க, 12 அணிகள் தீவிரமாக மோதி வருகின்றன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த வகையில், நேற்று UP யோதாஸ் அணிக்கு எதிராக பெங்கால் வாரியர்ஸ் மோதியது. இரு அணிகளும் சம பலத்துடன் இருந்ததால், போட்டியானது கடைசி வரை பரபரப்புடனே நகர்ந்தது. இதில், UP யோதாஸ் ஒரு புள்ளி வித்தியாசத்தில் (33-32) பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. இதனை தொடர்ந்து, நடைபெற்ற தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இடையில் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியின், ஆரம்ப முதலே ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 48-28 என்ற புள்ளிக் கணக்கில், தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. இதில், பெற்ற வெற்றியின் மூலம், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 64 புள்ளிகளுடன், புள்ளி பட்டியலில் 2 வது இடத்திற்கு முன்னேறியது. UP யோதாஸ் 60 புள்ளிகளுடன் 4 வது இடத்தை பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here