புரோ கபடி: புனேரி பல்டனிடம் வீழ்ந்த தமிழ் தலைவாஸ்.. முடிவுக்கு வந்த ப்ளே ஆப் கனவு!!

0
புரோ கபடி: புனேரி பல்டனிடம் வீழ்ந்த தமிழ் தலைவாஸ்.. முடிவுக்கு வந்த ப்ளே ஆப் கனவு!!
புரோ கபடி தொடரின் 10-வது சீசன் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் நேற்று (பிப்ரவரி 11) நடந்த முக்கிய போட்டியில் புனேரி பல்தான் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை பெற்றனர். ஆனாலும் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இருந்து ஆதிக்கம் செலுத்திய புனேரி பல்தான் அணி  56-29 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதில் புனேரி பல்தான் 4 முறை ஆல் அவுட் புள்ளிகளை பெற்று அசத்தியது. மற்றொரு லீக் போட்டியில் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் பெங்களூர் புல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் துவக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 50-28 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here