புரோ கபடி லீக்: எதிரணியிடம் கெத்து காட்டிய பாட்னா பைரேட்ஸ்…, புள்ளிபட்டியலில் முன்னேறி அபாரம்!!

0

இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரில், நேற்று (பிப்ரவரி 10) யூ மும்பா அணி பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இதில், வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில், பாட்னா பைரேட்ஸ் அணி 19 புள்ளி வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அதாவது, யூ மும்பா 23 புள்ளிகள் எடுக்க, பாட்னா பைரேட்ஸ் 44 புள்ளிகளை எடுத்து வெற்றியை உறுதி செய்தது.

IND vs ENG டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன.? முழு விவரம் உள்ளே!!

இதில், பாட்னா அணியின் சச்சின் 10 புள்ளிகளை எடுத்து அசத்தியுள்ளார். இந்த வெற்றியின் மூலம், பாட்னா அணியானது 63 புள்ளிகளுடன் 4 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதே போன்ற மற்றொரு ஆட்டத்தில், பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய தெலுங்கு டைட்டன்ஸ் அணி 35 – 55 என்ற புள்ளிகள் எடுத்து தோல்வியை தழுவியது. இன்று (பிப்ரவரி 11) நடைபெறும் முக்கிய போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here