PKL 2024: பெங்கால்  வாரியர்ஸை வீழ்த்திய குஜராத் ஜெயண்ட்ஸ்…, டாப் 4 ல் நுழைந்து அபாரம்!!

0
கொல்கத்தாவில் புரோ கபடி தொடரின் இறுதிக் கட்ட லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று (பிப்ரவரி 9) பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி மோதியது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கடைசி வரை போராடிய நிலையில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 41-32 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.
இதனை தொடர்ந்து, நடைபெற்ற மற்றொரு போட்டியில் தபாங் டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில், ஜெய்ப்பூர் அணியின் அர்ஜுன் தேஷ்வால் சிறப்பாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 27-22 என்ற புள்ளி வித்தியாசத்தில்  டெல்லி அணியை வீழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here