புரோ கபடி லீக்: யு மும்பாவிடம் கெத்து காட்டிய தமிழ் தலைவாஸ்…, புள்ளிப் பட்டியலில் முன்னேறி அசத்தல்!!

0
புரோ கபடி லீக்: யு மும்பாவிடம் கெத்து காட்டிய தமிழ் தலைவாஸ்..., புள்ளிப் பட்டியலில் முன்னேறி அசத்தல்!!
புரோ கபடி லீக்: யு மும்பாவிடம் கெத்து காட்டிய தமிழ் தலைவாஸ்..., புள்ளிப் பட்டியலில் முன்னேறி அசத்தல்!!

புரோ கபடி லீக் தொடரில், யு மும்பா அணியை 34-20 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி புள்ளி பட்டியலில் முன்னேறியுள்ளது.

புரோ கபடி லீக்:

ஹைதராபாத்தில் புரோ கபடி லீக் தொடரின் இறுதி லீக் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இந்த லீக் சுற்றில், யு மும்பா அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் அணி போட்டியிட்டது. இதில், தமிழ் தலைவாஸ் அணி, போட்டி ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே, யு மும்பா அணியை ஆல் அவுட் செய்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து, முதல் பாதி வரையிலும், தமிழ் தலைவாஸ் அணியே ஆதிக்கத்தை செலுத்தியது. இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில், யு மும்பா அணி 10-18 என்ற புள்ளி வித்தியாசத்தில் பின்தங்கியே இருந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியிலும், தமிழ் தலைவாஸ் அணி புள்ளிகளை குவிக்க, இறுதியில், 34-20 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் யு மும்பா அணி தோல்வியை தழுவியது.

இந்த போட்டிக்கு பிறகு தொடங்கப்பட்ட மற்றொரு போட்டியில், தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இதில், இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தாலும், இறுதியில், பாட்னா பைரேட்ஸ் அணி 36-35 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டிகளின் மூலம், 8வது இடத்தில் இருந்த தமிழ் தலைவாஸ் 48 புள்ளிகளுடன் 5 வது இடத்திற்கு முன்னேறியது. மேலும், பாட்னா பைரேட்ஸ் அணி 47 புள்ளிகளுடன் 6 வது இடத்திலும் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here