நம்பர் 1 அணியை வீழ்த்திய குஜராத் ஜெயண்ட்ஸ்…, அதிக புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தல்!!

0
நம்பர் 1 அணியை வீழ்த்திய குஜராத் ஜெயண்ட்ஸ்..., அதிக புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தல்!!
நம்பர் 1 அணியை வீழ்த்திய குஜராத் ஜெயண்ட்ஸ்..., அதிக புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தல்!!

புரோ கபடி லீக் தொடரில், நம்பர் 1 அணியை வீழ்த்தி கெத்து காட்டி, குஜராத் ஜெயண்ட்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது.

புரோ கபடி லீக்:

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரில், நேற்று புனேரி பல்டன் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில், ஆரம்பத்தில் புனேரி பல்டன் அணி ஆதிக்கம் செலுத்த, குஜராத் ஜெயண்ட்ஸ் அணி ஆல் அவுட்டானது. இதனால், முதல் பாதியில் 22-21 என புள்ளிக் கணக்கில் புனேரி பல்டன் அணி முன்னிலையில் இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில், சுதாரித்து கொண்ட குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வீரர்கள் அதிரடி காட்டினார். இவர்களது, தாக்குதலை சமாளிக்க முடியாமல், புனேரி பல்டன் புள்ளிகளை இழந்து தடுமாறியது. இதனால், ஆட்ட நேர முடிவில், முதலிடத்தில் இருக்கும் புனேரி பல்டன் அணியை, குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 51-39 என்ற புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிராக யு மும்பா அணி மோதியது. இந்த போட்டியில், 35-33 என்ற புள்ளி வித்தியாசத்தில் யு மும்பாவை வீழ்த்தி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிகளால், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 46 மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 41 புள்ளிகளுடன் 10 வது மற்றும் 11 வது இடத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here