நிர்வாண காட்சியை தாண்டி பிசாசு 2 படத்தில் இது இருக்கு – சொதப்பலில் முடிந்த மிஷ்கினின் மாஸ்டர் பிளான்!!

0
நிர்வாண காட்சியை தாண்டி பிசாசு 2 படத்தில் இது இருக்கு - சொதப்பலில் முடிந்த மிஷ்கினின் மாஸ்டர் பிளான்!!

ஆண்ட்ரியா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள, பிசாசு 2 படத்தில் நிர்வாண காட்சியை தாண்டி, பயங்கர காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

ஏ சான்றிதழ்:

நடிகை ஆண்ட்ரியா நடிப்பில், இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள,  பிசாசு 2 அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தின், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பூர்ணா, விஜய் சேதுபதி, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய  வேடங்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த படத்தில், நடிகை ஆண்ட்ரியாவின் நிர்வாண காட்சி ஒன்று இருந்ததாகவும், இதனால் படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைக்கும் என அஞ்சி அதை தூக்கி விட்டதாக மிஷ்கின் விளக்கம் அளித்தார். குழந்தைகள் அனைவரும் பார்க்கும் படமாக இது இருக்கும் என மிஸ்கின்  தனது பேட்டியில் தெரிவித்தார். தற்போது இந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழு, இந்தப் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

நிர்வாண காட்சி தாண்டி மிரட்டல் நிறைந்த பல திகில் காட்சிகள் இந்த படத்தில் இருப்பதால், இதற்கு யூ.ஏ சான்றிதழ் வழங்க முடியாது என்றும், ஏ சான்றிதழ் மட்டும்தான் வழங்க முடியும் என படக்குழு விளக்கம் அளித்துள்ளது. இதனால், ரிவைசிங் கமிட்டிக்கு இந்தப் படத்தை மீண்டும் மிஸ்கின் அனுப்ப உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here