பிபின் ராவத் இறப்பு குறித்த முக்கிய பரபரப்பு அறிக்கை – விமானப்படை தளபதியிடம் தாக்கல்!!

0

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் இறப்பு குறித்த முக்கிய அறிக்கை விரைவில் தற்போதைய விமானப்படை தளபதியிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது.

முக்கிய அறிக்கை :

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து காரணமாக டிசம்பர் 8-ஆம் தேதி பலியானார். அவரோடு சேர்ந்து அவரது மனைவி மதுலிகா உள்ளிட்ட 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம், குறித்த விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த விபத்தானது, மனிதத் தவறுகளாலோ அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாகவோ ஏற்படவில்லை எனவும், controlled flight in to the rain (CIFT) காரணமாக மரங்களின் மீது மோதி விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விமானி எந்த தவறும் செய்யவில்லை என சொல்லப்பட்டுள்ளது. அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக, பார்வைத் திறன் குறைந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என  இறுதி தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இந்த இறுதி அறிக்கை விமானப்படை தளபதியிடம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here