Saturday, April 13, 2024

அருமையான “பிந்தி சோலே” ரெசிபி – செஞ்சு பாருங்க!!

Must Read

ஹோட்டலில் செய்யும் சில அருமையான டிஷ், வீட்டில் செய்ய முடியுமா?? என்றால் பலரும் கேள்வி தான் என்று கூறுவர். ஆனால், அப்படி ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சமையல் நாம் வீட்டிலும் செய்யலாம். இன்று நாம் பார்க்கபோறது, “பிந்தி சோலே” ரெசிபி இதோ..

தேவையான பொருட்கள்:

வெள்ளைகொண்டைக்கடலை – 200 கிராம்
பிரிஞ்சி இலை – 1
ஏலக்காய்- 3
கிராம்பு – 2
பட்டை – 1
ஜீரகம் – 1 தேக்கரண்டி
சோம்பு- 1 தேக்கரண்டி
மல்லி – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
கஸ்தூரி மேத்தி – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
பச்சைமிளகாய் – 2
வெங்காயம் – 2
தக்காளி – 2
தண்ணீர் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை:
  • முதலில், கொண்டைக்கடலையை 8 மணி நேரத்திற்கு முன் ஊற வைக்க வேண்டும். பின், அதனை, குக்கரில், போட்டு கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, க்ரீன் டீ பை, ஏலக்காய், உப்பு மற்றும் பேக்கிங் சோடா போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  • 5 விசில் வந்ததும் இறக்கிவிடவும், அதில் இருக்கும் டீ பையை எடுத்து விடுங்கள்.
  • தனியாக ஒரு சட்டியில், ஜீரகம், சோம்பு, மல்லி, மிளகு, கஸ்தூரி மேத்தி, காய்ந்த மிளகாய் இவற்றை நன்றாக வறுக்கவும். நல்ல வாசனை வந்ததும், மிக்ஸியில் பொடியாக அரைத்து விட வேண்டும்.
  • இப்பொது வேறுஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, தக்காளி வெங்காயம், பச்சைமிளகாய் பிரிஞ்சி இலை போட்டு நன்றாக வதக்கவும். நன்னடராக எண்ணெய் பிரியும் பக்குவத்தில் வரும்.
  • அப்படி வந்தது, நாம் அரைத்து வைத்த பொடி, மஞ்சள், கொஞ்சம் தனி மிளகாய் பொடி சேர்த்து நன்றாக வதக்கவும், பின்பு நாம் எடுத்து வாய்த்த கொண்டைக்கடலையை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும்.
  • சரியான பக்குவம் வந்ததும், இறக்கி கொத்தமல்லி தூவி இறக்கிவிடவும்.
  • அருமையான “”பிந்தி சோலே” ரெடி!!
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகிட்டீங்களா? குறுகிய காலத்தில் தேர்ச்சி பெற இது போதும்? உடனே முந்துங்கள்!!!

TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகிட்டீங்களா? குறுகிய காலத்தில் தேர்ச்சி பெற இது போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத்துறைகளில் 6,244 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -