கொரோனா எதிரொலி: இந்தியா உட்பட 7 நாடுகளின் பயணிகளுக்கு தடை விதித்தது பிலிப்பைன்ஸ் அரசு!!!

0

அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பிலிப்பின்ஸ் அரசு, இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் பயணிகளுக்கு ஜூன் 30 வரை தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளது.

மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவியது. இதன் காரணமாக மிக அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டன. அதனால் தங்கள் மக்களுக்கு தொற்று ஏற்படாமல் பாதுகாக்க தொற்று அதிகமுள்ள நாடுகளுடனான விமான போக்குவரத்துக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்தன.

மேலும் தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தன. இந்நிலையில் பிலிப்பைன்ஸ் அரசு இந்தியா, இலங்கை, நேபாளம், ஓமன், பாகிஸ்தான், வங்கதேசம்,  மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த விமான தடையை ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே அந்நாட்டு அரசு இரண்டு முறை தடையை நீடித்துள்ளது. இது மூன்றாவது முறையாகும். இது தவிர மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு 14 நாள்களுக்குள்ளாக பயணம் மேற்கொண்ட வேறு நாட்டு பயணிகளுகும் பிலிப்பின்ஸ் அரசு தடை விதித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here