Ph. D பட்டப்படிப்பு மேற்கொள்வோர் கவனத்திற்கு., புதிய வழிமுறைகள் வெளியீடு – யுஜிசி அதிரடி உத்தரவு!!

0
Ph. D பட்டப்படிப்பு மேற்கொள்வோர் கவனத்திற்கு., புதிய வழிமுறைகள் வெளியீடு - யுஜிசி அதிரடி உத்தரவு!!
Ph. D பட்டப்படிப்பு மேற்கொள்வோர் கவனத்திற்கு., புதிய வழிமுறைகள் வெளியீடு - யுஜிசி அதிரடி உத்தரவு!!

பிஎச் டி எனப்படும் ஆராய்ச்சி பட்டப்படிப்பு மேற்கொள்வோருக்கான திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் குறித்த அறிவிப்பை, பல்கலைக்கழக மானிய குழு அதிரடியாக வெளியிட்டுள்ளது.

அதிரடி வெளியீடு:

குறிப்பிட்ட ஒரு துறையில், முதுகலை படிப்புக்கு பின் டாக்டர் பட்டம் பெற Phd எனப்படும் ஆராய்ச்சி படிப்பை மாணவர்கள் படிக்கலாம். நான்காண்டுகள் வரை, இந்த படிப்பை முடித்து குறிப்பிட்ட துறையில் டாக்டர் பட்டம் பெறலாம். பிஎச் டி எனப்படும் இந்த உயர்நிலை படிப்பை முடித்தவர்கள் மட்டுமே, கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிய அனுமதிக்கப்படுவர் என யுஜிசி அண்மையில் அறிவித்திருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் தற்போது திருத்தப்பட்ட புதிய அறிவிப்புகளை யுஜிசி அதிரடியாக வெளியிட்டுள்ளது. அதன்படி, பிஎச்டி-க்கான மதிப்பீடாக கருதப்படும் ஆய்வறிக்கையை இனி சக மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழில் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை.

உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி படித்த பள்ளி மீண்டும் திறப்பு., வகுப்புகளை தொடங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!

இதுபோக, பி எச் டி படிப்புக்கு முன் எம் பில் படிக்க வேண்டும் என்பதை முற்றிலும் ரத்து செய்வதாகவும், 55 சதவீதம் அல்லது அதற்கு இணையான தரத்துடன் மாணவர்கள் மூன்றாண்டு படிப்பை முடித்து இருந்தாலே போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here