மத்திய அரசுக்கு ஆஃபர் அளித்த பைஸர் நிறுவனம் !!! – 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு 5 கோடி டோஸ் தடுப்பூசி

0

நாடு முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் நிலையில் மத்திய மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு நோய் தொற்று பரவும் விகிதத்தை குறைக்கின்றனர். இதில் தடுப்பூசி பெரும் பங்காற்றி வருகிறது. மத்திய அரசுக்கு 5 கோடி தடுப்பூசி தருவதாக பைஸர் நிறுவனம்.

பைஸர் நிறுவனத்தின் ஆஃபர்:

உலகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவிவருகிறது. இதனால் நாடு முழுவதும் மிகுதியான பாதிப்புக்குளாகியுள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு, தடுப்பூசியின் அவசியம் குறித்து மக்களிடையே எடுத்து கூறி வந்தது. தற்போது மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.

மாநிலங்கள் நேரடியாக வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்தது. தடுப்பூசி விற்பனை குறித்து மத்திய அரசுடன் பைஸர் நிறுவனம் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வந்தது. தற்போது  “இந்தியாவில் எங்கள் தடுப்பூசியை விற்பது தொடர்பாக நாங்கள் மத்திய அரசுடன் ஆலோசித்து வருகிறோம். இந்தியாவில் விரைவில் பைஸர் நிறுவனத்தின் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என நம்புகிறோம்” என நிறுவனத்தின் சார்பாக கூறப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவுக்கு 5 கோடி டோஸ் தடுப்பூசிகளை சில நிபந்தனைகளுடன் ஜூலை முதல் அக்டோபர் மாதத்துக்குள் வழங்கத் தயாராக இருப்பதாக பைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகளை 12 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் செலுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here