ஏற்றமில்லாத பெட்ரோல்,டீசல் விலை…! – இன்றைய நிலவரம் என்ன !!!

0

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த சில வாரங்களாக ஏற்றத்தையே சந்தித்து வந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இன்று  பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் எந்தவித மாற்றமின்றி நேற்றைய விலையிலையே நீடிக்கிறது.

நாள்தோறும் நிலையற்ற தன்மையிலையே விளங்கும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் மக்கள் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து இன்று வரை பலமுறை பெட்ரோல்,டீசல் விலைகள் ஏற்றத்தை சந்தித்து உள்ளன. இருப்பினும் தமிழ்நாட்டில் சென்னையை பொறுத்தவரை இன்னும் அது சதத்தை எட்டவில்லை. இந்நிலையில் அண்டை மாநிலங்களில் இதன் விலை சதத்தை தாண்டி போகிக்கொண்டு இருக்கிறது.

இந்த விலைகளானது பொதுத்துறை ஆயில் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப விலையை நிர்ணயிக்கின்றனர். எனவே இதன் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. மேலும் தமிழகத்தின் மற்ற பிற மாவட்டங்கள் கிருஷ்ணகிரி,நீலகிரி,விழுப்புரம்  உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் பெட்ரோல்  விலைகள் 100 ரூபாயை தாண்டி  உள்ளது.

இந்நிலையில் சென்னையை பொறுத்தவரை இன்று  அதன் விலை எந்த மாற்றத்தையும் எதிர்கொள்ளவில்லை. அதன்படி தலைநகர் சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.98.65-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.92.83-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here