ஏறுமுகத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை… இன்றைய நிலவரம் என்ன!!!

0

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஒரு நாள் போல் அடுத்த நாள் இருப்பதில்லை. எப்பொழுது அதிகரிக்கும் எப்பொழுது குறையும் என்று அந்த எண்ணெய் நிறுவனங்களைத் தவிர யாரும் அறியாத ஒன்றே. அந்த வகையில் பெட்ரோல் நேற்றைய விலையை  விட 22 காசுகள் அதிகரித்தும் மற்றும் டீசல் நேற்றைய விலையை விட 12 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது.

நம் அன்றாட வாழ்க்கைக்கு  அத்தியாவசிய தேவைகளில்  ஒன்றாக மாறியது தான் இந்த பெட்ரோல் மற்றும் டீசல். இதன் விலை நாளுக்கு நாள் மாற்றம் அடையக்கூடியவை.அந்த அந்த எண்ணெய் நிறுவனங்களே கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்த பிறகு அவ்வப்போது அதன் விலை குறைந்தும், பெரும்பாலான நேரங்களில் அதிகரித்தும் வருகிறது.

இந்நிலையில் , நேற்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 97.69 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 91.92 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் ,இன்றோ பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 97.91 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து 92.04 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here